இந்த ஆண்டில் இறுதி சந்திரக் கிரகணம் : யாருமே பார்க்க முடியாது!!

254

சந்திரக் கிரகணம்

இந்த ஆண்டுக்கான இறுதி சந்திரக்கிரகணம் எதிர்வரும் 16ஆம் திகதி தென்பட உள்ளது. முழு பூரண தினமான 16ஆம் திகதி இந்த சந்திரக்கிரகணத்தை பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அன்றைய தினம் அப்பலோ விண் கலம் நிலவில் தரையிறங்கிய 50ஆவது ஆண்டு நிறைவு நாளாகும்.

இந்தநிலையில் சந்திரக்கிரகணம் அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, ஆசியா போன்ற இடங்களில் தென்படுமென தெரிவிக்கப்படுகிறது. வடஅமெரிக்காவில் இது தென்படாது. அதேபோல ஏனைய இடங்களிலும் இது தென்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சந்திரக் கிரகணத்தையடுத்து, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி அடுத்த சந்திரக்கிரகணம் தென்படுமென இலங்கையின் வானியல் ஆய்வாளர் சந்தன ஜெயவர்தன தெரிவித்திருக்கிறார்.