மேற்கத்திய நாகரீகத்தில் வளர்ந்ததற்காக பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மோசமான தண்டனை!!

410


மோசமான தண்டனை



இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய இளம்பெண், அதிக மேற்கத்திய நாகரீகத்தில் வளர்வதாகக் கூறி அவர் எதிர்பாராத ஒரு தண்டனையை அவரது பெற்றோர் கொடுத்துள்ளனர். சிறு வயதாக இருக்கும்போது Nyla Khan (30)ஐ உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக் கொடுப்பதாக வாக்களித்திருந்தனர் அவரது பெற்றோர்.



ஸ்காட்லாந்தில் வளர்ந்து வந்த நிலையில் Nylaவை ஒரு நாள் விடுமுறைக்கு செல்வதாகக் கூறி பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அவரது பெற்றோர். அங்கு, காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது, தன்னருகே குடும்பத்தினர் உறவினர் அனவருமே தன்னை சூழ்ந்து உட்கார்ந்திருப்பதைக் கண்ட Nylaவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.




அன்று காலை முதல் மாலை வரை அனைவரும் மாறி மாறி Nyla மேற்கத்திய நாகரீகத்தில் வளர்வது பாவம் என்றும், அதற்கு பிராயச்சித்தமாக Nylaவின் உறவினரை மணக்க வேண்டும் என்று வற்புறுத்த, வேறு வழியின்றி மனதில்லாமல் தனது சகோதரன் உறவு முறை கொண்டவரை மணந்து கொண்டிருக்கிறார் Nyla.


அவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமலே சிறிது காலம் பாகிஸ்தானில் இருந்துவிட்டு, தனது புதிய கணவனை விட்டு விட்டு பெற்றோருடன் ஸ்காட்லாந்து திரும்பியிருக்கிறார் Nyla. தனது பெற்றோர் வீட்டை விட்டு தனியாக வந்து வாழ்ந்த நிலையிலும் பெற்றோர் மீதுள்ள அன்பால், அவருக்கு போன் செய்து ரிசீவரை காதில் வைத்துக் கொள்வாராம் Nyla, அம்மாவின் குரலையாவது கேட்கலாம் என்று.

பின்னர் சுமார் மூன்றாண்டுகளுக்குப்பின் தனது எண்ணங்களை தனது பெற்றோரிடம் விளக்கி, தான் விவாகரத்து பெற விரும்புவதாக கூறியுள்ளார் Nyla. தற்போது, விவாகரத்துக்குப்பின் தான் ஒரு சுதந்திரப் பெண்ணாக உணர்வதாகத் தெரிவிக்கிறார் Nyla.