வவுனியாவில் பிரபல உணவகம் ஒன்றில் மீதிப்பணம் கேட்ட நபருக்கு நேர்ந்த கதி!!

766

மீதிப்பணம் கேட்ட நபருக்கு நேர்ந்த கதி

வவுனியாவில் பிரபல உணவகம் ஒன்றில் உணவருந்திய பின் பணத்தை செலுத்தி மீதிப்பணம் கேட்ட நபரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் உணவருந்திய நபர் ஒருவருக்கு மீதிப்பணத்திற்கு பதிலாக ‘டொபி’ ஒன்றை கடை உரிமையாளர் வழங்கியுள்ளார்.

குறித்த நபர் ‘டொபியை’ ஏற்க மறுத்து மீதிப்பணத்தை வழங்குமாறு கோரிய நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கருத்து தெரிவிக்கையில், குறித்த உணவகத்தில் உணவருந்தியதற்காக 105 ரூபாய் பில் தரப்பட்டது. அதற்காக 120 ரூபாவை கொடுத்த நிலையில் மீதி 15 ரூபாவிற்கு ஒரு 10 ரூபாவும் ஐந்து ரூபாவிற்கு ஒரு 2.00 ரூபா பெறுமதியான ‘டொபியும்’ வழங்கப்பட்டது.

குறித்த டொபியை ஏற்க மறுத்து ஐந்து ரூபா மீதிப் பணத்தை கேட்டபோது சில்லறை நாங்கள் அச்சடிப்பதில்லை என பேசி என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சித்தனர். குறித்த சம்பவத்தின் காரணமாக தான் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும்,

இவ்வாறாக அப்பாவிகளிடம் ஏமாற்றி நூதன முறையில் கொள்ளையிடும் வர்த்தக நிலையங்கள் மீதும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பாவனையாளர்கள் அலுவலக அதிகார சபையினர் குறித்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், வவுனியாவில் இது போன்று சரியான சில்லறை வழங்காது ‘டொபி, இனிப்புக்களை’ வழங்கும் வர்த்தக நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் பல வர்த்தக நிறுவனங்களில் ‘குபேரன்’ சிலையை வைத்து அதற்குள் சில்லறைப் பணத்தை போட்டு பகிரங்கமாகவே பதுக்கி வைக்கும் வர்த்தகர்களால் செயற்கையாக சில்லறைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.