இறப்பிலும் பிரியாத அரச ஜோடி : ஆராய்ச்சியாளர்களை அசரவைத்த கல்லறை!!

807


இறப்பிலும் பிரியாத அரச ஜோடி



கஜகஜஸ்தான் நாட்டில் ஒரு இளம் அரச ஜோடி அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் கல்லறை ஒன்றினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டீனேஜ் ஜோடிகள் கஜகஸ்தானில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் நோக்கியபடியே அதில் இருந்துள்ளது.



இதனை பார்த்ததும் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் 16 அல்லது 17 வயதுடையவர்கள் எனவும், உயர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.




அவர்கள் உடன்பிறந்தவர்களா அல்லது காதலர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றின் முந்தைய வாழ்வில் தோற்ற அந்த ஜோடி, அதன்பிறகான வாழ்க்கையில் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் ஒருவரையொருவர் பார்த்தபடி புதைக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளனர்.


அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று வல்லுநர்கள் இன்னும் ஆராயவில்லை. ஆனால் எஞ்சியுள்ள இடங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் கல்லறையில் தங்கம் மற்றும் வெண்கலப் பொக்கிஷங்கள் காணப்பட்டன. மேலும் அந்த இளம் பெண் ஒவ்வொரு கைகளிலும் இரண்டு வளையல்களையும், சூரியனை சித்தரிக்கும் பதக்கங்களையும் அணிந்திருந்தார். காதணிகள் போன்ற வடிவிலான விலைமதிப்பற்ற தங்க மோதிரங்களையும் அவர் அணிந்திருந்தார் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.