6 பாஸ்போர்ட்… 65 நாடுகள்… உலகத்தை கலக்கும் 68 வயது தமிழ் பாட்டி!!

458


68 வயது தமிழ் பாட்டி



68 வயதாகும் சென்னையை சேர்ந்த வயதான பெண் ஒருவர் 65க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றிப்பார்த்து வாழ்க்கையின் அழகை ரசித்து வருகிறார். நம்முடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது உலக நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என பலரும் ஆசைப்படுவதுண்டு. ஆனால் அதிகமானோருக்கு அது ஒரு கனவாகவே முடிந்துவிடும்.



ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய விடுமுறை நாட்களில் அதனை நிறைவேற்றி கொள்வார்கள். அந்த வரிசையில் சென்னையை சேர்ந்த 68 வயதான சுதா மஹாலிங்கம் என்பவர் 6 பாஸ்போர்ட்டுகளுடன் 65க்கும் அதிகமான நாடுகளை சுற்றிபார்த்துள்ளார். இதனை இப்படியே நிறுத்திவிடாமல், இன்னும் தன்னுடைய பயணத்தை தொடர உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.




உலகெங்கிலும் பயணம் செய்வது மட்டுமல்லாமல், அனைத்து சாகசங்களையும் மேற்கொண்டு வருகிறார். முன்னாள் பத்திரிகையாளரான சுதா, ‘The Travel Gods Must Be Crazy’ என்ற தன்னுடைய பயணக்குறிப்பில் பிரமாண்டமான மலைகள் மற்றும் மயக்கும் தீவுகளை பற்றி பட்டியலிட்டுள்ளார்.


சுதா தன்னுடைய 40 வயதில், பா துகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்திற்கான ஆற்றல் துறை ஆய்வாளராக ஆனபோது தான் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பயணம் என்பது முன்கூட்டிய கருத்துகளையும், ஒரே மாதிரியானவற்றையும் சோ தனைக்கு உட்படுத்த உதவுகிறது. இது உங்களைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், உங்கள் பலங்களை அடையாளம் காணவும் உதவுகிறது. இது உங்கள் கையிருப்பு பற்றியும், நெருக்கடிகளை சமாளிக்கவும் கற்றுக்கொடுக்கிறது.


1996 ஆம் ஆண்டில் கைலாஷ் மன்சரோவருக்கு 32 நாள் மலையேற்றத்துடன் சுதா தனது தனி பயணத்தைத் தொடங்கினார். அந்த பயணத்திற்கு செல்ல தனது 5 வயது மகனை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அந்த பயணம் பற்றி கூறுகையில், “இது என்னைப் பற்றி எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. குறிப்பாக என் க டினத்தன்மை. என்னால் தனியாக காரியங்களைச் செய்ய முடியும் என்பதை அறிய இது உதவியது.” எனத்தெரிவித்துள்ளார்.