வானத்திலிருந்து பொழிந்த இரும்பு மழை : பீதியில் ஓடிய மக்கள் : நடுவானில் நடந்தது என்ன?

316


இத்தாலி நாட்டில் ரோமின் ஃபியமிசினோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென இரும்பு துண்டு மழை பொழிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.



ஃபியமிசினோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்திலிருந்து கொட்டிய நுற்றுக்கணக்கான சிதைந்த பொருட்களே இந்த இரும்பு மழைக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

நோர்வே விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 விமானம், சனிக்கிழமை ஃபியமிசினோ விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அருகே உள்ள ஐசோலா சேக்ரா நகரின் மீது சிதைந்த பொருட்கள் கொட்டியுள்ளது. இரும்பு துண்டுகள் கீழே இருந்த வீடு மற்றும் கார்கள் மீது விழுந்ததில் சேதம் ஏற்பட்டுள்ளது.



அதேசமயம், இதில் ஒருவர் காயமடைந்ததாகவும், 25 கார்கள் மற்றும் 12 வீடுகள் சேதமடைந்ததாக நகர அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி தோட்டக்கள் போல் கழிவு மழை பொழிந்ததாக உள்ளுர் வசி ஒருவர் தெரிவித்துள்ளார்.



சம்பவம் குறித்த பொலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரோமில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் பயணித்த விமானத்தின் ஒரு இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரும்பு கழிவுகள் கொட்டியதாக நோர்வே விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.