வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கலாசார விழா!!

441

தமிழர், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் கலாசார விழா ஒன்று வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்றது.

சிறுவர் அபிவிருத்தி கரங்கள் நிறுவனம் எல்லப்பர் மருதங்குளம் கணேசா சிறுவர் கழகத்துடன் இணைந்து பொது நோக்கு மண்டபத்தில் குறித்த நிகழ்வினை நடத்தியது.

இதில் தமிழர் பாரம்பரியத்துடன் தொடர்புடைய பனையோலை மாலைகள், பனையோலை அட்டைகள் அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், தமிழர் பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப்பட்டது. அத்துடன் சிறந்த கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழர் பாரம்பரிய, கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர்களான ந.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன், க.செந்தில்ரூபன், கிராம அலுவலர், அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட பிரதிநிதிகள், சிறுவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.