அமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவருக்கு அதிர்ச்சி தகவல்!!

274

கிரீன் கார்ட்

அமெரிக்காவின் கிரீன் கார்ட்டிற்காக விண்ணப்பிக்கும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்று குடியேறுவதற்கு, விண்ணப்பிக்கும் குறித்த நபர் அதிகபட்ச வருமானத்தை கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறையை அமெரிக்க நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், இவ்வாறு அமெரிக்காவின் கிரீன் கார்ட்டுக்காக விண்ணப்பிப்பவர்கள் அமெரிக்க அரசின் மருத்துவ காப்பீடு, ரேஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை சார்ந்திருக்காமல், அதிகபட்ச வருமானத்தை கொண்டவராக இருக்க வேண்டும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதுடன், அமெரிக்க அரசின் நலத்திட்டங்கள் அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே அதிக அளவில் சென்றடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வரும் நிலையில் இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்ற போதிலும் இதனால் கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்கள் சுமார் நான்கு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.