இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திர பறவை!!

367


விசித்திர பறவை



இலங்கையில் முதன்முறையாக அடையாளம் காணப்படாத பறவை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலாபத்தில் நேற்று முன்தினம் இந்தப் பறவை இனங்கண்டுள்ள நிலையில், பிரதேச மக்கள் இணைந்து பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.



இரவில் இந்த பறவை முத்துபன்த்திய பகுதிக்கு வந்துள்ளது. கழுகின் பதத்தை கொண்டுள்ள இந்த பறவை, 109 சென்றிமீற்றர் நீளத்தில் உடல் அமைந்துள்ளது. இந்த பறவை தொடர்பில் தகவல்களை பெற வனவிலங்கு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.




இது போன்ற ஒரு பறவையை இதற்கு முன்னர் ஒரு போதும் இலங்கையில் அவதானித்ததில்லை என குறிப்பிடப்படுகின்றது. பறவையின் உடலில் சிறு கா யங்கள் காணப்பட்டமையினால் வனவிலங்கு அதிகாரிகள் சி கிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.