வவுனியா மாணவர்கள் தேசியரீதியில் கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாதனை!!

905


கணித விஞ்ஞான ஒலிம்பியாட்



 

அண்மையில் இடம்பெற்ற தேசிய கணித  விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில்  வவுனியா தமிழ் மத்தியமகா வித்தியாலய  மாணவன்  செல்வன் மயூரன் .யதுர்சன் 135  புள்ளிகளுடன் தேசிய ரீதியில்   மூன்றாமிடத்தையும்  வவுனியா இறம்பைக்குளம் மகிளீர் வித்தியாலய  மாணவி செல்வி .எஸ்.சப்தகி  130 புள்ளிகளுடன்  தேசிய ரீதியில்   ஐந்தாமிடத்தையும்  பெற்று சர்வதேச ஒலிம்பியாட்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் .



மேலும்  வவுனியாவில் இருந்து கலந்து கொண்ட  சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி  செல்வி ரி.கபிசா  117.5  புள்ளிகளுடன்  18 ஆம் இடத்தையும், வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன் செல்வன்  எஸ்.கரிஸ் 116  புள்ளிகளுடன்   21 ஆம் இடத்தையும், இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவி  செல்வி ஜெ.சாகித்தியா 115.5  புள்ளிகளுடன்   22ஆம் இடத்தையும்



வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன்  செல்வன் எஸ். சன்சய், 113 புள்ளிகளுடன்   26 ஆம் இடத்தையும், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி  செல்வி எஸ்.ஆரபி 80.5  புள்ளிகளுடன்   100 வது  இடத்தையும்  பெற்றுகொண்டனர்.


இவர்களை ஆசிரியை ஹம்ஸவதனா மகேந்திரன், வவுனியா மாவட்ட விஞ்ஞான கள கற்கை நிலைய முகாமையாளர் அ.ஜெய்கீசன், வவுனியா தெற்கு கல்வி வலய விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் இ.மாதவன், ஓய்வுநிலை விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.இந்திரலிங்கம், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.