முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய் : ஒரு அபூர்வ நிகழ்வு!!

514

அபூர்வ நிகழ்வு

கசகஸ்தானில் முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் ஒரு பெண் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இரட்டைக் குழந்தைகளை கர்ப்பத்தில் சுமந்த கசகஸ்தானைச் சேர்ந்த Liliya Konovalova (29), 11 வாரங்கள் வித்தியாசத்தில் தனது குழந்தைகள் இரண்டையும் பெற்றெடுத்தார்.

மே மாதம் 24ஆம் திகதி Liya என்னும் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த Liliya, ஆகத்து மாதம் 9ஆம் திகதி Liyaவின் தம்பி Maximஐப் பெற்றெடுத்து மருத்துவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கினார். காரணம், இது ஒரு அபூர்வ நிகழ்வாகும், 50 மில்லியனில் ஒருவருக்குதான் இப்படி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படி மூன்று மாத இடைவெளியில் Liliya குழந்தைகளைப் பெற்றெடுத்ததற்கு காரணம், அவரது உடலில் இரண்டு கர்ப்பப்பைகள் இருந்ததாகும். இரட்டையர்களாக இருந்தாலும் தங்களுக்கென்று தனித்தனி கர்ப்பப்பைகளில் வளர்ந்திருக்கிறார்கள் Liyaவும் Maximமும்.

தனக்கு இப்படி ஒரு நிலைமை இருப்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும், மருத்துவர்களின் அக்கறையால் தான் நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்ததாகவும் தெரிவிக்கும் Liliya, முதல் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாகவும், இரண்டாவது பிரசவம் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


தற்போது தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள Liliyaவுக்கு ஏற்கனவே ஏழு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.