வவுனியாவிலிருந்து நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு நடைபவனி ஆரம்பம்!!

1403

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு நடைபவனி

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வேல் தாங்கிய பாதயாத்திரை இன்று(23.08.2016) காலை வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாட்டுடன் ஆரம்பமானது.

ஆலய நிர்வாகியும் அறநெறிச் செல்வியுமான கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரையில் பெருந்திரளான நல்லூர்க் கந்தன் அடியார்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வேல்தாங்கிய பாதயாத்திரைக் குழுவினர் மன்னார் வீதியூடாக வவுனியா நகரை அடைந்து பின்னர் A9 வீதியூடாக நல்லூர் கந்தன் ஆலயத்தினை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

9வது வருடமாக இடம்பெறும் இவ் வேல்தாங்கிய பாத யாத்திரை வரும் 29.08.2019 அன்று நல்லைக்கந்தன் திருத்தலத்தினை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.