வவுனியாவில் பிரமாண்டமாக இடம்பெற்ற திருக்குறள் பெருவிழா!!

399

திருக்குறள் பெருவிழா

வவுனியாவில் திருக்குறள் பெருவிழா இன்று (24.08.2019) குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலில் வடமாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களமும் கல்வி அமைச்சும் ஏற்பாடு செய்த திருக்குறள் விழா வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் உள்ள திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவுகூரப்பட்டதுடன், அங்கிருந்து அதிதிகள் குடியிருப்பு கலாசார மண்டபம் வரை மேள தாளங்களுடன் அழைத்து செல்லப்பட்டனர்.

குடியிருப்பு கலாசார மண்டப முன்றலில் பு னரமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை திரையாக்கம்
செய்து வைக்கப்பட்டதுடன், கலாசார மண்டபத்தில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது.

அத்துடன், நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் வவுனியா கல்வியியல் கல்லூரியின் ஓய்வுநிலை பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தொடக்கவுரையை நிகழ்த்தியிருந்தார்.

இதனையடுத்து தமிழ்மணி அகளங்கன் இணைத் தலைமையுரையினையும் சிறப்புரையினை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் சர்வேஸ்வரா சிறப்புரையினையும் நிகழ்த்தியிருந்தார்.

இதேவேளை கலை நிகழ்வுகளும் பெற்றிருந்ததுடன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் திருவள்ளுவரின் புகைப்படமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.