வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் மேம்பாட்டு ஒன்றயத்தின் கலந்துரையாடல்!!

639


கலந்துரையாடல்



தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தமிழர் மேம்பாட்டு ஒன்றியத்தின் கலந்துரையாடல் வவுனியா நகரசபை மண்டத்தில் இன்று (24.08.2019) மதியம் இடம்பெற்றது.



வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் பின்னடைந்துள்ள தமிழர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன் மற்றும் பேராசிரியர் எம்.கருணாநிதி தலைமையில் தமிழர் மேம்பாட்டு ஒன்றியம் உருவாக்கப்பட்டது.




அதன் தொடர்ச்சியாக ஒன்றியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், பொதுமக்களின் அபிப்பிராயத்தை பெற்று ஒன்றியத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்துடும் நோக்கில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.


இதன்போது பலரும் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கருத்துக்களையும், அதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

ஒன்றியத்தின் வடமாகாண இணைப்பாளர் இரா.ராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக போராசியர்களான எஸ்.சந்திரசேகரன் மற்றும் எம்.கருணாநிதி,


வவுனியா கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.பார்த்தீபன், ஒன்றியத்தின் கொழும்பு மற்றும் மலையக பகுதி இணைப்பாளர் இந்திரஜித், அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.