ஏழை விதவையின் மகளுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டம் : விமானம் எனக்கு வேண்டாம் என கூறிய ஆச்சரியம்!!

391

பெரும் அதிர்ஷ்டம்

இந்தியாவில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த விதவை தாயின் மகளுக்கு சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதை நேரில் பிரதமருடன் சேர்ந்து பார்க்கும் பொன்னான வாய்ப்பு அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோவிந்தா – தேஜேஸ்வரி தம்பதிக்கு காஞ்சனா பாலா ஸ்ரீ வாசவி மற்றும் இன்னொரு பெண் பிள்ளை என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கோவிந்தா ஆறு வருடங்களுக்கு முன்னர் உ யிரிழந்துவிட்டார். வாசவி ஆந்திர மாடல் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இஸ்ரோ தொடர்பான வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட வாசவி அதில் திறமையாக பதிலளித்து முதலிடம் பிடித்துள்ளார்.

இதையடுத்து வரும் 7ஆம் திகதி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையிடத்தில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து நேரில் பார்க்கும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார்.

இந்தியாவில் மொத்தமே 60 மாணவ, மாணவிகள் மட்டுமே இதை நேரில் பார்க்கவுள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வாசவி மட்டுமே தேர்வாகியுள்ளார்.

இதற்காக இஸ்ரோ வாசவிக்கு விமான டிக்கெட்டை அனுப்ப முன் வந்த போதும் தான் ரயிலில் வரவே விரும்புவதாக தெரிவித்துள்ளார், இதை தொடர்ந்து ஏசி ரயில் டிக்கெட் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வாசவி கூறுகையில், எனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்களுக்கு நன்றி, என் தாய்க்கு விதவைகளுக்கான ஓய்வூதியம் மாதம் 2,250 ரூபாய் கிடைக்கும். அதில் தான் எங்கள் குடும்பம் நடக்கிறது. மேலும் பணம் தேவைப்பட்டால் தினக்கூலி வேலைக்கு அவர் செல்வார், எனக்கு வருங்காலத்தில் பொறியாளர் ஆக வேண்டும் என்பதே விருப்பம் என கூறியுள்ளார்.