17 வயதில் திருமணம் : வாடகை தாயாக மாறியது ஏன்? இளம் பெண் உருக்கம்!!

327

இளம் பெண் உருக்கம்

இந்தியாவில் வாடகை தாய் முறையை இந்திய அரசு ஒழிக்க புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த தடை மசோதா கூறித்து அவர்கள் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளனர்.

டெல்லியில் வாடகைதாய் தங்கியிருக்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் பிரபல தமிழ் ஊடகமான பிபிசி அங்கிருக்கும் தாய்மார்களிடம் பேட்டி எடுத்துள்ளது. அதில் ஜோதி என்ற வாடகைதாய் கூறுகையில், 17 வயதில் எனக்கு திருமணம் ஆனது. வேலை பற்றி என் கணவர் பொய் சொல்லிவிட்டார்.

அவர் ம துவுக்கு அடிமையானவர் என்பது திருமணத்திற்கு பின்பு தான் எனக்கு தெரியவந்தது. வேலையில்லாத அவர் என்னை தா க்க தொடங்கினார். இதனால் அவரை விட்டு விட்டு வந்த நான், வாடகை தாயாக உள்ளேன். என்னுடைய குழந்தைகள் சிறிய குழந்தைகளாக இருப்பதால், இதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை என்று கூறியுள்ளார்.

இந்த விடுதியை ஜோதி இணையதளம் மூலம் கணடுபிடித்துள்ளார். மகப்பேரு காலத்தில் மட்டும் இவர் தங்கியிருப்பார், அப்போது இவர் உண்ணும், உணவுகள், மாத்திரைகள் கண்காணிக்கப்படும். குழந்தை பிறந்த பின்னர் வாடகை தாய்கள் பலர் அந்த குழந்தையின் புகைப்படத்தை கேட்பார்கள், அந்த புகைப்படம் எவ்வாறு இருக்கிறது என்று பார்க்க விரும்புகின்றனர்.

இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டால், அடுத்து அந்த குழந்தையை கொடுக்க மனமில்லாமல் போய்விடும். எனவே குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அந்த குழந்தையை நான் பார்க்க விரும்புவதில்லை என்று ஜோதி கூறியுள்ளார்.

மேலும் ஒரு வாடகை தாயான ராஜ்குமாரி கூறுகையில், நான் என்ன செய்ய முடியும்? என்னுடைய சிறுநீரகத்தை விற்க வேண்டுமா? போதிய வேலை இல்லை. எந்த இடத்திலும் வேலை செய்வது, பெண்களுக்கு எளிதல்ல, வாடகை தாயாக இருப்பதால், வீட்டிலோ, விடுதியிலோ தங்கி, உங்கள் குடும்பத்தின் கஷ்டத்தை போக்க முடியும்.

முன்பெல்லாம் வாடகை தாயை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் இருந்தனர். இப்போது அதன் தேவை 400 சதவீதம் அதிகரித்துள்ளது. வணீகரீதியான வாடகை தாய் முறை தடை செய்யப்படும் முன், குழந்தை பெற வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு உதவ போதியா வாடகை தாய்மார்கள் இல்லை என்பதே உண்மை, இதற்கு தடை வந்தால், சட்டபூர்வமாக்குவதற்கு சண்டை வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மசோதா இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டால், வணீக ரீதியில் நடைபெறும் வாடகை தாய் முடிவுக்கு வரும்.