தாயின் தூக்கத்தால் காரில் இருந்து நடுக்காட்டில் தவறி விழுந்த குழந்தை : உறைய வைக்கும் வீடியோ!!

228

பழனியில் இருந்து கேரளா செல்லும் வழியில் தாயின் கவனக்குறைவால் காரில் இருந்து நடுக்காட்டில் ஒன்றரை வயது குழந்தை தவறி விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பழனியில் மொட்டை போடுவதற்காக வருகை தந்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.

மலைப்பாதையில் கார் சென்றுகொண்டிருந்த போது அனைவரும் அயர்ந்து உறங்கி விட்டனர். அந்த சமயத்தில் தாயின் மடியில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை கோகிலா, திடீரென ஜன்னல் வழியே தவறி வெளியில் விழுந்துள்ளது.

இதனை கவனிக்காமல் காரில் இருந்தவர்களும் வேகமாக சென்றுகொண்டிருந்துள்ளனர். சாலையில் விழுந்த குழந்தை தவழ்ந்து அங்கிருந்து வேலி அருகே சென்றுள்ளது. சிசிடிவியில் இதனை பார்த்த வனத்துறை ஊழியர் கைலாசம் உடனடியாக பொலிஸாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், காயத்துடன் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இதற்கிடையில் 40 கிமீ தூரத்தில் உள்ள வீட்டை அடைந்ததும் தம்பதியினர் குழந்தையை காணவில்லை என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளும் போது, குழந்தை வனத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.