அரசியல் பிரவேசம் குறித்து மலிங்க வெளியிட்டுள்ள தகவல்!!

2


மலிங்க


“பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல. பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும்.” என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,“எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல. நிர்வாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன். நான் கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமே பிரபலமானவன். கிரிக்கெட் விளையாட்டில் நான் முடிந்தவரை செய்வேன். பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல.


பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும். எனினும் ஆட்சியென்பது நிர்வாகம் ஆகும். நிர்வாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன்.” என கூறியுள்ளார். இதேவேளை, இந்த ஊடக சந்திப்பின் போது முத்தையா முரளிதரன் வெளியிட்ட கருத்து தொடர்பிலும் மாலிங்க பேசியிருந்தார்,


“எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. எனக்கு கிரிக்கெட் தொடர்பிலேயே தெரியும். கிரிக்கெட் தொடர்பில் ஏதேனும் வினாவினால் என்னால் பதிலளிக்க முடியும். அது முரளியின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கக்கூடும். வியத்மக குறித்து நீங்கள் கூறும் வரை எனக்கு என்னவென்று தெரியாது. முரளி சேர்ந்திருந்தால் அது தனிப்பிட்ட விருப்பமாக இருக்கும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.