வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

788


வருடாந்த அலங்கார உற்சவம்



வவுனியா சாந்தசோலை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் வருடாந்த அலங்கார பெருவிழா கடந்த (01.09.2019) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.



10ம் நாளான இன்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றதுடன் மகாறம்பைக்குளம் புளியடி சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பால்காவடி, செடில்காவடி, பாற்செம்பு, தீச்சட்டி போன்றன பிரதான வீதியூடாக ஆலயத்தினை வந்தடைந்தது.




11ம் நாளான நாளையதினம் (11.09.2019) அம்பாள் கிராம வலம் வரவுள்ளதுடன் 12நாளான (12.09.2019) வைரவர் பூஜையுடன் விழா சிறப்புற இனிதே நிறைவுறவுள்ளது.