பாடசாலைகளின் கட்டடத் திறப்பு விழா : அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை!!

470


பண்பு அறிவு வலு நிறைந்த பிள்ளைகள் சமூகம் ஒன்றை நாட்டிற்கு உருவாக்கும் நோக்கில் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கௌரவ கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களது ஆலோசனையின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்ட,

‘அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ தேசிய வேலைத் திட்டமானது செயற்றிட்ட பணிப்பாளரான கந்தையா பத்மானந்தன் அவர்களது முகாமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.



குறித்த தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் பாடசாலைகள் தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் என்பன உள்ளடங்குவதுடன் அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதி, வகுப்பறைகள், ஆரம்பக் கற்றல் வள நிலையங்கள், தொழினுட்ப ஆய்வுகூடங்கள், நவீன வகுப்பறைகள், குடிநீர் வசதிகள், மின்சார வசதி, மலசல கூட வசதிகள் போன்ற பல்வேறு வகையான நிர்மாணிப்பு மற்றும் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறாக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த 500 செயற்றிட்டங்கள் நேற்றையதினம் (09.09.2019) முதல் மாணவர்களுக்கு உரித்தளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.