வவுனியா சிறைச்சாலையில் கண்பார்வை குறைபாடுள்ள 30 கைதிகளுக்கு வாழ்வளித்த சிறீ சபாரத்தினம் அறக்கட்டளை!!

288


வவுனியா சிறைச்சாலையில்..



வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிலுள்ள கண்பார்வை குறைபாடுள்ள 30 கைதிகளுக்கு சிறீ சபாரத்தினம் அறக்கட்டளையினால் முக்குக்கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டது.  இந் நிகழ்வு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று (12.09.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றிருந்தது.



சிறைக்கைதிகளின் வாரத்தினை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையிலுள்ள கண்பார்வை குறைபாடுள்ள 30 சிறைக்கைதிகளுக்கு மூக்குகண்ணாடி வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களின் பிள்ளைகளுக்கு (பாடசாலை மாணவர்கள்) பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சிறு குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் சிறையிலுள்ள இரு சிறைக்கைதிகளின் தண்டப்பணத்தினையும் சிறீ சபாரத்தினம் அறக்கட்டளையினர் செலுத்தி அவர்களையும் விடுதலை செய்துள்ளனர்.




ஊடகங்களுக்கு சிறைச்சாலையினுள் அனுமதி மறுக்கப்பட்டமையினால் சிறைச்சாலை வாயிலுக்கு முன்பாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் மூக்குக்கண்ணாடிகள் கையளிக்கப்பட்டதுடன் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகளுக்கு கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மூக்குக்கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் சிறீ சபாரத்தினம் அறக்கட்டளையினர் மற்றும் சிறைச்சாலை நலன்புரி சங்க உறுப்பினர், நகரசபை உறுப்பினர், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பௌத்த மதகுரு, சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.