வவுனியாவில் கொட்டும் மழைக்கும் மத்தியில் சிறப்பாக இடம்பெற்ற ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!

517


இரதோற்சவம்



வவுனியா, ஈச்சங்குளத்தில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது.



வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் – சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் கந்த கணேசதாஸக் குருக்கள் தலைமையில் முதன் முறையாக இரதோற்சவம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இடம்பெற்றது.




அந்தணச் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி விசேட அபிடேக தீபராதனைகளை நிகழ்த்த, விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.


தொடர்ந்து வெளிவீதியில் தேரில் எழுந்தருளிய விநாயகப் பெருமானை பக்த அடியார்கள் அரோகரா கோசத்துடன் ஆண்களும், பெண்களுமாக வடம் பிடித்து தேரில் இழுத்துச் சென்றனர்.

குறித்த ஆலயத்தில் முதன்முறையாக இடம்பெற்ற இரத்தோற்சவத்தின் போது மழை பெய்தமையால் மகிழ்ச்சியடைந்த பக்த அடியார்கள் தேவார திருவாசங்களை ஓதியும், கற்பூரச் சட்டிகளை ஏந்தியும் விநாயகப் பெருமானை வழிபட்டனர். விநாயகப் பெருமானும் அடியார்களுக்கு அருள்பாலித்தார்.


இதேவேளை, நீண்ட வறட்சிக்கு பின்னர் இதன்போது வவுனியாவில் மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.