வீரர்கள் தவறு செய்தால் மனைவிகள் தான் காரணமா? கொந்தளித்த சானியா மிர்சா!!

485


கொந்தளித்த சானியா மிர்சா



கிரிக்கெட் வீரர்கள் தவறு செய்யும் போது அவர்களுடைய மனைவிகளை குற்றம் சுமத்துவது முட்டாள்தனம் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். இந்திய அணியின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டெல்லியில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டார்.



அப்போது பேசிய அவர், திசைதிருப்பும் ஆதாரமாக மனைவிகளையும், பெண்களையும் பொதுவாக பயன்படுத்துபவர்களை நோக்கி கடுமையான தா க்குதலை நடத்தினார். அதற்கு உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சோபிக்க தவறும் சமயங்களில் எல்லாம், அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா கடும் விமர்சனத்திற்கு உள்ளாவதை சுட்டிக்காட்டினார்.




விராட்கோஹ்லி ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறும் சமயங்களில் எல்லாம் அனுஷ்கா சர்மாவை குற்றம் சுமத்துகிறார்கள். எதற்கு எதனை சேர்த்து கூறுவது. இது ஒரு முட்டாள்தனம். பலமுறை எங்களுடைய கிரிக்கெட் அணி உட்பட மற்ற கிரிக்கெட் அணிகள், வீரர்களின் மனைவிகள் அல்லது தோழிகளை சுற்றுப்பயணத்தின் போது அனுமதிப்பதில்லை. ஏனெனில் அவர்களால் வீரர்களின் கவனம் திசைதிருப்ப படுகிறதாம்.


“அதற்கு என்ன பொருள்? ஆண்களை இவ்வளவு திசைதிருப்பப் போகிற அளவிற்கு பெண்கள் என்ன செய்கிறார்கள்?? ” என்று கேள்வி எழுப்பினார். மேலும், பெண்களை வீரர்களின் ஊக்கம், பலமாக கருதாமல், ஏன் ஆழ்ந்த பிரச்னையாக பார்க்கிறீர்கள். வாழ்க்கை துணை உடன் இருக்கும் சமயத்தில், விளையாடி விட்டு தனது அறைக்கு திரும்பும் அந்த வீரர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை பாருங்கள். அவர்கள் அளிக்கும் ஆதரவு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று பேசியுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷோயப் மாலிக் இந்திய அணிக்கெதிரான போட்டியில் சரியாக விளையாடாததால், அவருடைய மனைவி சானியா மிர்சாவை பாகிஸ்தான் ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.