வவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா!!

438


வடமாகாண பண்பாட்டு விழா



வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று 12.10.2019 (சனிக்கிழமை) நடைபெற்றது.



கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பண்பாட்டுப் பெருவிழாவின் இறுதி நாளான இன்று, சிறப்பு பட்டிமன்றம், கவியரங்கம், பண்பாட்டு ஊர்வலம் கலை நிகழ்வுகள் சிறந்த நூற்பரிசு வழங்கள், விருதுவழங்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.




அத்துடன் பண்பாட்டு அம்சங்கள் தாங்கிய ஊர்வலம் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்டு புகையிரத நிலைய வீதி ஊடாக வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தை வந்தடைந்தது.


இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரோன் ராகவன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உதவிப்பணிப்பாளர் சுஜீபா சிவதாஸ், முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கம், கலைஞர் வேல் ஆனந்தன், ஓய்வு நிலை சிரேஸ்ட விரிவுரையாளர், மு.கௌரிகாந்தன் என பலர் கலந்துகொண்டனர்.