உலகளவிலான போட்டிகளில் 25 பதக்கங்கள் : புதிய வரலாறு படைத்த வீராங்கனை!!

427


வரலாறு படைத்த வீராங்கனை



உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.



ஜேர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சம்பியன்ஷிப் போட்டி நடந்தது. கடைசி நாளான நேற்று, பெண்களுக்கான புளோர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.




அதில், அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் சாகசத்தை காட்டி சிலிர்க்க வைத்தார். இதன்மூலம் அவர் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.


இதேபோல் பேலன்ஸ் பீம் பிரிவிலும் அவர் முதலிடம் பிடித்தார். இந்த தொடரில் அவர் கைப்பற்றும் 5வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

இதன்மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவர் 25 பதக்கங்களை கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்பு உலக ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில், பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போ 23 பதக்கங்களை வென்றதே அதிகபட்சமாக இருந்தது.


இந்நிலையில் தான் அடுத்தடுத்து 2 பதக்கங்களை கைப்பற்றியதன் மூலம் சிமோன் பைல்ஸ் புதிய வரலாறு படைத்துள்ளார். இவர் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்க பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.