வவுனியாவில் சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட்டது!!

8


சர்வதேச முதியோர் தினம்


வவுனியா வைரவபுளியங்குளம் முதியோர் சங்கத்தால் சர்வதேச முதியோர் தினநிகழ்வு இன்று (15.10) இடம்பெற்றது.வரைவபுளியங்குளம் முதியோர் சங்கத்தின் தலைவர் ம.தேவராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதிகளாக பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், கிராம உத்தியோகத்தர் க.விஜயகுமார், தமிழருவி த.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


நிகழ்வில் முதியவர்கள் கௌரவிக்கபட்டதுடன் அவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று, வெற்றிபெற்றவர்களிற்கு பரிசில்களும் வழங்கிவைக்கபட்டது.


நிகழ்வில் விசேடமாக ‘வடிவுறு மூப்பு’ எனும் தலைப்பில் தமிழருவி சிவகுமாரனால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டிருந்ததுடன், சிதம்பரேஸ்வரர் நடனாலயத்தின் ஏற்பட்டில் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நடனமாடியவர்களுக்கும் போன்னாடை போர்த்தி கெளரவம் வழங்கப்பட்டிருந்தது. நிகழ்வின் இறுதியில் சுயாதீன இளைஞர் அமைப்பினரால் ஐந்நூறு பனம் விதைகள் விதைப்பதற்காக முதியோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.