டுவிட்டர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் : அரசியல்வாதிகளுக்கு ஆப்பு?

499

டுவிட்டர்

உலகம் முழுவதும் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் டுவிட்டரில் வெளியிடுவதை நிறுத்த தீர்மானித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெக் டோர்சி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தின் மூலம் எவருடைய கருத்து சு தந்திரத்தையும் ப றிக்க முயற்சிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் இந்த முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

டுவிட்டர் நிறுவனத்தின் இந்த தீர்மானம் நவம்பர் 22ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தின் இந்த தீர்மானம் இங்கிலாந்து பொதுத் தேர்தலில் பெரிய பா திப்பை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை இந்த தீர்மானம் மோ சமான முடிவு எனவும் பழமைவாதிகளை மௌனமாக்கும் நோக்கம் கொண்ட தீர்மானம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்ம்பின் தேர்தல் பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.