கேரளாவை உலுக்கிய சம்பவம் : பிரபல நடிகை கு ற்றவாளி என பரபரப்பு தீர்ப்பு!!

451


நடிகை சரிதா நாயர்



கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் மோசடியில் பிரபல நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட மூவர் கு ற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் தண்டனை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.



கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்ற சோலார் பேனல் முறைகேடு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.




சிறையில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோ சடி செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பா லியல் தொ ல்லை கொடுத்ததாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல லட்சம் மோ சடி செய்ததாகவும் அவர் மீது 2009-ம் ஆண்டு புகார் பதிவு செய்யப்பட்டது. மோ சடி தொடர்பாக சரிதா நாயர், அவரது மானேஜர் ரவி உள்பட 3 பேர் மீது வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் கு ற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி சரிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.