பெற்றோர் எ திர்ப்பை மீறி பலரது உ யிரை கா ப்பாற்ற களத்தில் இறங்கிய 19 வயது பெண் : குவியும் பாராட்டுகள்!!

307


குவியும் பாராட்டுகள்



நெருங்கிய உறவினர் சிறுநீரக செயலிழப்பால் உ யிரிழந்த பா திப்பால் உ டலுறுப்பு தானம் குறித்து 19 வயது பெண் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.



இந்தியாவை சேர்ந்த 19 வயதாகும் இளம்பெண் ராதிகா ஜோஷி. இவருடைய நெருங்கிய உறவினர் சிறுநீரக செ யலிழப்பு காரணமாக உ யிரிழந்திருக்கிறார்.




இதைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் மாற்று உடல் உறுப்புகள் கிடைக்காததால் இ றந்து போகிறார்கள் என்ற உண்மை அவருக்கு தெரிய வந்திருக்கிறது.


10 லட்சம் பேரில் 0.86 சதவீதம் பேரே தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அமைப்பு ஒன்றை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற் படுத்தி வருகிறார், ராதிகா ஜோஷி.

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இது பற்றி விரிவாக விவாதிக்கப்படாததால் ஒருசிலரே தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறார்கள்.


மேலும் இந்தியாவில் சில மருத்துவமனைகள் தான் உடல் உறுப்புகளை பிரித்தெடுத்து நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுதி வாய்ந்தவையாக இருக்கின்றன என்கிறார் ராதிகா.

இவரது அமைப்பில் 6 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தெரு நாடகங்கள், ஓவியங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வழியே பொதுமக்களிடம் உடல் உறுப்பு தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.

பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் உணவகங்கள் போன்ற இடங்களில் செயல்முறை விளக்கம் அளிக்கிறார்கள். தங்கள் அமைப்பில் இளைஞர்களை அதிக அளவில் இணைத்து அவர்கள் மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராதிகாவின் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பின்பு மகளின் உயி ர்காக்கும் உன்னத நோக்கத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ராதிகாவின் முயற்சியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன்வந்து, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.