வவுனியாவில் பத்து இலட்சம் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு!!

351

பத்து இலட்சம் மரக்கன்றுகள்

வவுனியா சிதம்பரபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று (22.11.2019) காலை அலியன்ஸ் பினான்ஸ் நிறுவனத்தின் வவுனியா கிளை முகாமையாளர் தலைமையில் பசுமைப் போர்வையை மீண்டும் புத்தாக்கம் செய்வதற்கும் எதிர்காலச் சந்ததியினருக்குச் சிறந்த ஒரு சூழலை உருவாக்கும் மரம் நாட்டும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் முக்கோட்பாட்டுத் தத்தவத்திற்கு அமைவாக பசுமைச் சூழலைப் பாதுகாப்பதற்கும் புவியின் தட்பவெப்ப நிலையை நிலையான தன்மையில்பேணிப் பாதுகாக்கவும் இன மத மொழி என்பனவற்றைக் கடந்து ஒற்றுமையை நிலைநாட்டும் நோக்குடன் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாடாளாவிய ரீதியில் முப்படையினருடன் இணைந்து நாட்டுவதற்கான செயற்திட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இதன் முதற்கட்டம் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் கிறிஸ்தவ ஆலயத்தில் சர்வ மதத்தளங்களில் உத்தியோகபூர்வமாக நாட்டிவைக்கப்பட்டது.

குறித்த நிறுவனத்தினால் இரண்டாவது தடவையாகவும் இவ்வருடத்தில் மரநடுகை மாதத்தை முன்னிட்டு பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டிவைக்கும் இந்நிகழ்வில் நிறுவனத்தின் ஊழியர்கள், ஆலய மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.