ஈழத்தை சேர்ந்த இளம் நடிகை பிரசாந்தி க டத்தப்பட்டாரா?

593


நடிகை பிரசாந்தி



இலங்கையை சேர்ந்த தமிழ் நடிகையான பிரசாந்தி தொடர்பான வழக்கில் புதிய திருப்பமாக அவர் குடும்பத்துடன் சொந்த நாடுக்கு சென்றுவிட்டார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



பிரபல திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் சென்னை நீதிமன்றத்தில் தா க்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கடல்குதிரைகள் என்ற திரைப்படத்தை நான் இயக்கி வருகிறேன். அதில் இலங்கையை சேர்ந்த பிரசாந்தி (20) என்ற பெண்ணை நடிக்க வைத்தேன். இவர் பெற்றோர் அகதியாக தமிழகம் வந்தனர்.




இந்நிலையில் பிரசாந்தியை கியூ பிரிவு பொலிசார் ம ர்மமான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர், அவரை மீட்க வேண்டும் என கோரினார். ஆனால் பொலிசார் அளித்த பதில் மனுவை தொடர்ந்து புகழேந்தி தங்கராஜின் மனுவை நேற்று நீதிபதி தள்ளுபடி செய்தார்.


இந்நிலையில் நீதிபதி மற்றும் பொலிசார் நீதிமன்றத்தில் விரிவாக பேசியது குறித்து தற்போது தெரியவந்துள்ளது. நீதிபதி கூறுகையில், வடபழனி பொலிசில் பாலகணேசன் என்பவர் மீது பிரசாந்தி புகார் கொடுத்ததாகவும், அது குறித்து பிரசாந்தியை பொலிசார் அழைத்து விசாரித்ததாகவும் மனுதாரர் புகழேந்தி கூறியது தவறு.

பிரசாந்தி போலி பாஸ்போர்டை பெற்ற ஒரு வழக்கில் பாலகணேசனும் ஒரு கு ற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக பிரசாந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய போது அவர் இந்தியாவில் இல்லை என திரும்ப வந்துள்ளது. எனவே பிரசாந்தி குடும்பத்துடன் இலங்கைக்கு சென்றுவிட்டார் என கூறப்படுகிறது.


அதுவும் அவர்கள் இலங்கைக்கு கள்ளத்தோண்டியில் சென்றனரா அல்லது முறையாக சென்றனரா என்பது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர் என்பதை நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே மனுவை தள்ளுபடி செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.