வவுனியாவின் அழகை சீரழிக்கும் கட்டாக்காலி மாடுகள் : உரிய நடவடிக்கை எடுக்குமா நகரசபை?

379


கட்டாக்காலி மாடுகள்



வவுனியாவின் நகரை அழகுபடுத்தும் முயற்சியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகள் வவுனியா நகரசபையினரின் அசமந்தபோக்கினால் வீணாகிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.



வவுனியா நகரின் அழகை மெருகூட்டும் முயற்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தினை சூழவுள்ள பகுதியில் அழகுற யப்பான் ரோஸ் எனப்படும் அழகிய செடியினை நாட்டி பராமரித்து வந்தனர். அச் செடியின் மீது இரவு நேரங்களில் கட்டாக்காளி மாடுகள் படுத்து உறங்கி அவற்றினை சேதமாக்கியது.




அதன் பின்னர் வவுனியா வர்த்தக சங்கத்தினர் கடந்த மாதம் 28ம் திகதி வவுனியா நகரை அழகுபடுத்தி ஏனைய நகரங்களுக்கு முன்மாதிரியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் வவுனியா நகரசபையினருடன் இணைந்து (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே அழகிய மரங்களை நாட்டி வைத்திருந்தனர்.


எனினும் அம மரங்களையும் இரவு நேரங்களில் மாடுகள் சேதப்படுத்தியுள்ளது. இரு மரங்களில் முற்றிலிலும் சேதமடைந்துள்ளதுடன் ஏனைய மரங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் தினசரி பல விபத்துக்கள் இடம்பெறுவதுடன் இன்று (01.12.2019) எமது கமராவில் பதிவாகின காட்சிகளே இவை.


வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளை கட்டுப்பட்டுத்துமாறு பல தடவைகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் நகரசபையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.