வவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா!!

664

மாற்றுத்திறனாளிகள் தின விழா

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகமும் வரோட், ஓர்கான், சீட், என்டர்வேல்ட் , உயிரிழை , செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிறுவனம் , அன்பாலயம் என்பவற்றுடன் இணைந்து நடாத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா வவுனியா நகரசபை கலாச்சார மண்டத்தில் இன்று (06.12.2019) காலை இடம்பெற்றது.

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் திறனாளிகள் இவர்கள் எனும் தொனிப்பொருப்பொருளில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இ.முஹமட் ஹனீபா மற்றும் விசேட விருந்தினர்களாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் , வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவர்ணராஜா,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிரேஸ்ட உளநல வைத்தியர் கலாநிதி சி.சுதாகரன் மற்றும். பங்காளி விருந்தினர்களாக வறோட் நிறுவனத்தின் இயக்குனர் வின்சன் டி போல் குரூஸ், உயிரிழை அமைப்பின் தலைவர் கோ.ஸ்ரீகரன், இலங்கை செவிப்புலனற்றோர் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் கு.கணநாதன் மற்றும்

விருந்தினர்களாக தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் , பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வரோட் மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பொது அறிவு வினாடி வினா இறுதிப்போட்டி, நடன நிகழ்வு, விழிப்புணர்வு உரை, நாடகம், விருந்தினர் உரை, பரிசில் வழங்கல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.