எலுமிச்சை தோல் வேகவைத்த நீரிலில் இவ்வளவு நன்மைகளா?

752


எலுமிச்சை தோல்



எலுமிச்சை நமது அன்றாட சமயலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதில் ஏராளமான விட்டமின் சி இருக்கிறது. மேலும் ஊட்டச் சத்துகள் உள்ளது.



ஒரு கப் எலுமிச்சை சாறில் 55 கி. வைட்டமின் சி உள்ளது. பெண்கள் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டியதில் இது 70%. இதைத் தவிர, பொட்டாசியம், கொஞ்சம் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவையும் உள்ளன.




எலுமிச்சை சுகாதார நலன்கள் வைட்டமின் சி, வைட்டமின் பி, பாஸ்பரஸ், புரதங்கள், மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற அதன் பல ஊட்டமளிக்கும் கூறுகள் காரணமாக உள்ளன.


அதுமட்டுமின்றி நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் எலுமிச்சையின் தோலின் கூட பல ஏராளமான நன்மைகள் உண்டு.

மேலும் எலுமிச்சைச் சாறை விட, எலுமிச்சை தோலிலும் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை வேகவைத்து அதன் நீரை பருகினால் உடலில் பல மாயங்கள் நிகழும் என்று சொல்லப்படுகின்றது. அந்தவகையில் தற்போது எலுமிச்சை வேகவைத்த நீரை பருகுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.


செய்முறை : எலுமிச்சை – 6, தண்ணீர் – 1/2 லிட்டர், தேன் – தேவையான அளவு. தயாரிக்கும் முறை : முதலில் எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதன் பிறகு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த நீரை 3 நிமிடம் அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். பின்பு அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

நன்மைகள் : இந்த பானத்தை தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோய்யெதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது. மேலும் மிகவும் ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் செரிமான பிரச்னைகள் சரியாகும் மற்றும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை சீராக வைத்துக்கொள்ளும்.

தினமும் காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால், உடலில் உள்ள மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலை சுத்தபடுத்தும். முக்கியமாக உடலில் உள்ள PH அளவை நிலைப்படுத்தும்.

இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்டக்கொழுப்புகள் வெளியேற்றப்படுகிறது.