ஏழை தமிழ் சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம் : நாசாவே திரும்பிப் பார்க்கும் ஆச்சரியம்!!

624

மிழ் சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி கே.ஜெயலட்சுமி ஒன்லைன் போட்டியில் வெற்றி பெற்று நாசாவுக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார். 16 வயதில் சாதித்திருக்கும் இந்த சிறுமி தொடர்பாக பல விடயங்களை அறிந்து கொள்ளுங்கள்.

ஜெயலட்சுமி ஒரு சாதாரண பெண் அல்ல, ஏனெனில் அவர் ம னநலம் பாதிக்கப்பட்ட தாயையும் அவளுடைய தம்பியையும் கவனிக்க கடினமாக உழைக்கிறார்.

அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள் இவர்தான். முந்திரி பருப்புகளை விற்பனை செய்வதுடன் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ட்யூசன் எடுத்து தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.

தனது படிப்புக்கான செலவையும் இதில் இருந்து வரும் சொற்ப வருமானத்தில்தான் அவர் கவனித்துக் கொள்கிறார். கோ 4 குரு ஏற்பாடு செய்த போட்டியைப் பற்றி பேசும்போது,

அந்தப் பெண் தற்செயலாக போட்டியைப் பற்றி அறிந்து கொண்டதாகவும், இப்போது அதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் இந்த சாதனை சிறுமி கூறுகிறார்.

மேலும் இதைப்பற்றி அவர் கூறுகையில் ” நான் ஒரு கேரம் போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டபோது, பலகை அருகே கிடந்த ஒரு செய்தித்தாளைக் கண்டேன். அதில் கடந்த ஆண்டு நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பை வென்ற தன்யா தஸ்னெம் பற்றிய கதை இருந்தது.

உடனடியாக நான் அதில் பங்கு பெற வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக பதிவு செய்தேன் ” என்று கூறியுள்ளார். இது TNIE ஆல் மேற்கோள் காட்டப்பட்டது.

எனவே, அவர் நேஷனல் மீன்ஸ் கம்-மெரிட் ஸ்காலர்ஷிப் போன்ற பல்வேறு உதவித்தொகைகளை வென்றுள்ளார். அவரது சாதனை குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ” நான் அப்துல் கலாம் ஐயாவைப் போல ராக்கெட் தயாரிக்க விரும்புகிறேன்.

இந்த பயணத்தை அரசுப் பள்ளியில் படிக்கும் எவரும் இதுவரை வென்றதில்லை. நான் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். என்னால் முடியும் என்றால் அவர்களாலும் முடியும் ” என்று ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

ஜெயலட்சுமியின் பயணத்திற்கு கிட்டதட்ட இரண்டு லட்ச ருபாய் செலவாகும். அவரின் தந்தை தனியாக வசித்து வருகிறார், எப்போதாவது இவருக்கு பணம் அனுப்புவார்.

இவரது நண்பர்களும், ஆசிரியர்களும் பாஸ்போர்ட் பெற இவருக்கு உதவியுள்ளனர். பாஸ்போர்ட் அதிகாரி ஜெயலட்சுமிக்கு 500 கொடுத்தார், மேலும் ஜெயலட்சுமி தனக்கு உதவுமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெயலட்சுமியின் பயணம் மற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் என்றும் அதனால் கண்டிப்பாக உதவுவதாகவும் கூறியுள்ளார். பள்ளி முதல்வர் கூறுகையில், ” ஜெயலட்சுமி மிகவும் திறமையான பெண் மற்றும் பல போட்டிகளில் வென்று வருகிறார். வானமே அவளுக்கு எல்லை” என்று கூறினார்.

நாசா நடத்திய போட்டியில் வென்ற ஒருசில மாணவர்களில் இவரும் ஒருவர். வெற்றியாளர்களுக்கு நாசாவின் முழு சுற்றுப்பயணமும் வழங்கப்படும், மேலும் அவர்கள் விண்வெளி வீரர்களுடன் உரையாடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.