3 மாதங்கள்…. 12 லிற்றர் தாய்ப்பால் : 5 உயிர்களைக் காப்பாற்றி நெகிழ வைத்த இளம் தாயார்!!

458


நெகிழ வைத்த இளம் தாயார்



இந்தியாவில் தொடர்ந்து 3 மாதங்கள் குழந்தைகளுக்கு 12 லிற்றர் தாய்ப்பாலை வழங்கி 5 பச்சிளங் குழந்தைகளின் உயிரை இளம் தாயார் ஒருவர் கா ப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.



குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 29 வயது இளம் தாய் ருஷினா மர்ஃபாஷியா. இவர் கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி வியான் என்னும் ஆண் குழந்தைக்குத் தாயானார்.




குழந்தைக்குத் தேவைப்படுவதைத் தவிர, அதிகப் பால் அவருக்கு சுரந்தது. இதை உணர்ந்த ருஷினா, உயிர்ப்பாலான தாய்ப்பாலை வீணாக்காமல் தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்க முடிவெடுத்தார்.


இதனையடுத்து அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 பச்சிளங் குழந்தைகளுக்கு வழங்க ஆரம்பித்தார் ருஷினா. தொடர்ந்து 3 மாதங்கள் சுமார் 12 லிற்றர் தாய்ப்பாலை வழங்கி, 5 குழந்தைகளின் உயிரைக் காத்திருக்கிறார் அவர்.

அக்குழந்தைகளின் நோய்வாய்ப்பட்ட அல்லது தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் அவருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். ருஷினா மாம் (mother’s own milk) என்னும் அமைப்பிலும் அங்கம் வகித்து வருகிறார்.


இதில் உறுப்பினராக உள்ள இளம் தாய்கள் அனைவரும் தாய்ப்பாலை தானமாக அளித்து வருகின்றனர். அகமதாபாத்தில் இயங்கி வரும் இந்த அமைப்பில், 250 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் சார்பில் சுமார் 90 லிற்றருக்கும் மேற்பட்ட தாய்ப்பால் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.