ஆறு ஆண்டு கால ஏக்கம் : பிள்ளை பெற்றெடுத்த திருநம்பி : நெகிழ வைத்த சம்பவம்!!

515


நெகிழ வைத்த சம்பவம்



பிரித்தானியாவில் திருநம்பி ஒருவர் நீண்ட ஆறு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் பெண் விந்து தானம் பெற்று அழகான பிள்ளை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.



பிரித்தானியாவில் குடியிருக்கும் திருநங்கை தம்பதி ரூபன் ஷார்ப்(39) மற்றும் 28 வயதான ஜே. பிறப்பில் பெண்ணான ரூபன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் முறைப்படி ஹார்மோன்களை எடுத்துக்கொண்டதன் மூலம்,




முகத்தில் ரோமங்கள், அழுத்தமான குரல் மற்றும் ஆண்பால் அம்சங்களை படிப்படியாக பெற்றுள்ளார். இவரது துணையான ஜே என்பவரே தற்போது ரூபனின் ஆறு ஆண்டு கால ஏக்கத்தை பூர்த்தி செய்து வைத்துள்ளார்.


தமக்கென வாரிசு வேண்டும் என முடிவு செய்த பின்னர் ரூபன் திருநங்கை மருத்துவர் ஒருவரை நாடியுள்ளார். முதற்கட்ட பரிசோதனையில் ரூபனால் கருத்தரிக்க முடியும் என்பதை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

பெண்பாலாக பிறந்து ஆணாக உருமாறிய பின்னரும் அவரது கருப்பை நீக்கப்படவில்லை. கர்ப்ப கால அனுபவத்தையோ தாய்மையின் அனுபவத்தையோ பெற தாம் ஏங்கியதில்லை என கூறும் ரூபன்,


ஒரு குழந்தைக்கான ஏக்கம் நெடுங்காலமாக இருந்து வந்தது எனவும் அதை மேற்கொள்வதற்கான வசதி தற்போது உள்ளது எனவும் ரூபன் தெரிவித்துள்ளார். திருமண புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்துள்ள ரூபன், தொடர்ந்து டெஸ்டோஸ்டிரோன் மருந்து எடுத்துக் கொண்டதாகவும்,

உரிய காலம் அமைந்ததும் கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பிள்ளை பெற்றெடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஒரு தெளிவான முடிவெடுக்க தமக்கு மூன்றாண்டுகள் ஆனது என கூறும் ரூபன்,

அதன் பின்னரே தமது துணையான ஜேவிடம் இது தொடர்பில் விவாதித்துள்ளார். மட்டுமின்றி கருத்தொற்றுமை எழாத பட்சத்தில் பிரியவும் ரூபன் முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக ஜே இந்த முடிவை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதாகவும், இருவரும் ஒன்றிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்ததாகவும் ரூபன் பதிவு செய்துள்ளார்.

ஒரு நாள் காலையில் தாம் தூக்கத்தில் இருந்து எழுந்ததாகவும், நீண்ட ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக மாதவிடாய் ஏற்பட்டது எனவும் ரூபன் ஸ்லாகித்துள்ளார். இது தமது நீண்ட கால ஏக்கத்தின் துவக்கப் புள்ளி என அப்போது தாம் உறுதி செய்து கொண்டதாக ரூபன் தெரிவித்துள்ளார்.

ரூபனுக்கு IUI முறைப்படி மருத்துவரால் கருவை கருப்பைக்குள் செலுத்தப்படும் சிகிச்சை நடத்தப்பட்டது. திருநங்கை நண்பர் ஒருவரே விந்து தானமும் செய்துள்ளார். மூன்று முறை கருத்தரிப்பு சிகிச்சைக்காக மட்டுமே ரூபன் தம்பதிக்கு 6,000 பவுண்டுகள் செலவாகியுள்ளது.

இந்த ஜோடிக்கு ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனை செவிலியர்கள் உதவியுள்ளனர். மட்டுமின்றி ரூபன் தனது குழந்தையை சிசேரியன் மூலம் பெற்றெடுத்துள்ளார். இந்த கட்டத்தை அடைய தமக்கு ஆறு ஆண்டுகள் ஆகியது எனக் கூறும் ரூபன், ஆனால் இப்போது எங்கள் கைகளில் ஒரு குழந்தை உள்ளது, அதுவே எங்களின் இறுதி இலக்காக இருந்தது எனவும் தற்போது தாம் முழுமையானதாக உணர்வதாகவும் ரூபன் வெளிப்படுத்தியுள்ளார்.