உலகில் அதிக எடை கொண்ட 11 வயதுச் சிறுவன் : 13 வயதில் எப்படி இருக்கிறான் தெரியுமா?

534

ஆர்ய பெர்மனா

உலகிலே அதிக எடை கொண்ட சிறுவனாக இருந்த இந்தோனேஷியாவை சேர்ந்த ஆர்யபெர்மனா, இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எடை குறைத்துள்ளார்.

இந்தோனேஷியாவை சேர்ந்த Arya Permana என்ற சிறுவன தன்னுடைய 11 வயதில் 190 கிலோ எடை இருந்தான். இதனால் அவன் வழக்கம் போல் வீட்டில் பயன்படுத்தும், கழிப்பறை போன்றவைகளை பயன்படுத்த முடியவில்லை, மிகவும் சிரமப்பட்டான்.

நூடுல்ஸ், எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிக்கன் வகைகள், பானங்கள் போன்றவைகளை Arya Permana தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால், அவரின் உடல் எடை அதிகரித்தது.

அவருடைய வயதிற்கு 6 சிறுவர்களை சேர்த்தால் எப்படி இருக்கும், அது போன்று மிகவும் குண்டாக காணப்பட்டார். இதனால் அவரால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை, வீட்டில் வந்து ஆசியர்கள் சொல்லி கொடுத்து வந்தனர்.

Arya Permana-னின் பெற்றோர் உணவு விவகாரத்தில் எவ்வளவு கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை, இது குறித்து சிறுவனின் தந்தை Ade Somantri கூறுகையில், அவன் ஐந்து வயதிலே அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிட்டான், இனிப்பு வகை உணவுகள், நூடுல்ஸ் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டான் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து அவன் வளர, வளர சாப்பாடு அதிகரித்து, நாள் ஒன்றிற்கு 5 சாப்பாடுகள் சாப்பிடும் அளவிற்கு தள்ளப்பட்டான், உடல் எடை அதிகரிப்பு காரணமாக, அவனால் 5 நிமிடத்திற்கு மேல் தனியாக நடக்க முடியாது, அவருக்கு மற்றவரின் உதவி தேவை.

இதனால் அவர்கள் மகனின் எடை காரணமாக மருத்துவரிடம் சென்ற போது, முதலில் பெற்றோர் மகனின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயந்துள்ளன்ர. அதன் பின் இதற்கு சம்மதம் தெரிவிக்க, தலைநகர் Jakarta-வில் சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.

தற்போது சிகிச்சை நடந்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், அதிக அளவு எடை குறைந்து பார்க்கவே ஆளே மாறி போன சிறுவனாக Arya Permana காட்சியளிப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடம் தெரிவித்துள்ளது.

13 வயதாகும் Arya Permana அறுவை சிகிச்சைக்கு பின் முன்பு போல் சாப்பிட முடியவில்லை, ஏனெனில் அப்படி அவர் விரும்பி சாப்பிட்டால் வாந்தி எடுப்பதால், அவர் உணவு கட்டுப்படுத்தியுள்ளார். நாள் ஒன்றிற்கு மிகப் பெரிய பிளேட்டில் இரண்டு சாப்பாடு சாப்பிட்டு வந்த Arya Permana தற்போது வெறும் 7 ஸ்பூன் அளவு சாப்பாடு, அவரின் வயிற்றை நிரப்புவதாக கூறுகிறார்.

இது குறித்து Arya Permana கூறுகையில், எடை குறைப்புக்கு பின் என்னால் பள்ளிக்கு செல்ல முடிகிறது, நண்பர்களுடன் விளையாட முடிகிறது, விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் என்னால் நீண்ட காலம் விளையாட முடியவில்லை. இருப்பினும் கால்பந்து விளையாட்டில் ஒரு சிறந்த வீரராக வருவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

சிகிச்சைக்கு முன் 190 கிலோ எடை இருந்த Arya Permana தற்போது 101 கிலோ இருக்கிறார். இதனால் அவர் 90 கிலோ எடை குறைத்துள்ளார். உடல் எடை குறைந்ததால், ஆனால் அவரின் தோல்கள் சுருங்கிய நிலையில் காணப்படுகிறது.

இருப்பினும் பெற்றோர் எங்களுடைய மகன் எடை குறைத்து சந்தோஷமாக, விளையாடுகிறான், பள்ளிக்கு சென்று வருகிறான், அது போதும் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.