வவுனியாவில் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போ தை மா த்திரைகள் : வர்த்தக சங்கம் அதிரடி நடவடிக்கை!!

500

வர்த்தக சங்கம் அதிரடி நடவடிக்கை

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போ தை ஏற்றும் ம ருந்துகளின் பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தி நல்லதொரு சமுகத்தினை உருவாக்கும் நோக்கத்துடன்,

வர்த்தக சங்கத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா மாவட்ட மருந்தக உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் செயலமர்வு வவுனியா இரண்டாம் குருக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள வர்த்தக சங்க காரியாலயத்தில் இன்றையதினம் காலை இடம்பெற்றது.

வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மகேந்திரன் , வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பீ.ஆர்.மானவடு,

சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ், உணவு மருந்து சுகாதார பரிசோதகர் பார்த்தீபன் ஆகியோர் பங்குபற்றி வவுனியா மாவட்ட மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினர்.

அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் சிபாரிசு இன்றி மருந்துக்களை வழங்க வேண்டாம் அவ்வாறு வழங்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் , பாடசாலை மாணவர்களுக்கு மருந்துகளை வழங்கும் சமயத்தில் மிகுந்த அவதான செலுத்தப்பட வேண்டும்,

அங்கீகரிக்கப்பட்ட விநியோகத்தர்களிடம் மருந்துகளை கொள்ளவனவு செய்தல் வேண்டும் . கட்டாயம் அனைத்து மருந்தகங்களிலும் குளிரூட்டி பயன்படுத்தப்பட வேண்டும் . மருந்துகள் சீராக பா துகாக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் இதனை மீறும் மருந்தக உரிமையார்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.