வவுனியாவில் அரச பேருந்துக்காக பல மணி நேரம் வீதியில் காத்துக் கிடக்கும் மாணவர்கள்!!

329


வவுனியாவில் இ.போ.ச பேருந்து சேவைகள் உரிய நேரத்தில் இடம்பெறாமையினால் பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும், பருவகால பயணச்சீட்டுக்கள் பலனளிக்கவில்லையெனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.



வவுனியா இ.போ.ச பேருந்து சாலையிலுள்ள பேருந்துகள் அதிகளவில் வெளி மாவட்டங்களை நோக்கிச் செல்கின்றதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதுடன் பாடசாலை ஆரம்பமாகிய பின்னரே பாடசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இ.போ.ச சாலையினால் மாணவர்கள் உட்பட பலர் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான நிலைமைகளை அகற்றி பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள்,



பாடசாலை மாணவர்களுக்கான பா துகாப்பான சேவைகளையும், தன்னிறைவான சேவைகளையும் வழங்க வவுனியா இ.போ.ச சாலை முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



இவ்வாறான கு ற்றச்சாட்டுக்கள் குறித்து வவுனியா இ.போ.ச சாலையின் முகாமையாளர் எச்.சாஹிருடன் தொடர்பு கொண்டு வினவியபோது,


வவுனியா சாலைக்கு 15 பேருந்து சாரதிகளும், நடத்துனர்களும் தேவைப்படுகின்றனர். இவ்வாறான ஆளணிப்பற்றாக்குறை காரணமாக கிராமப்புறங்களுக்கான சேவைகள் மேற்கொள்ள முடியவில்லை.

போதியளவு பேருந்துகள் சாலையில் காணப்படுகின்ற போதிலும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தர்மபால, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளாக கே. காதர் மஸ்தான், ரிஷாட் பதியூதீன் மற்றும் இ.போ.ச போக்குவரத்துச்சபைப் பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.