வவுனியா பொலிஸாரின் செயற்பாட்டை வரவேற்றுள்ள பொது அமைப்புக்கள்!!

426

போக்குவரத்து பொலிஸாரினால்..

வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் போக்குவரத்துக்கு இ டையூராகவும், சமூக சீர்கேட்டுடன் செயற்பட்ட இளைஞர்களது மோட்டார் சைக்கிள்களை ப றிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையை வவுனியாவின் சில பொது அமைப்புக்களும், சிவில் பா துகாப்பு குழுக்களும் வரவேற்றுள்ளன.

வவுனியாவில் நீண்ட கால பி ரச்சினையாக வைரவபுளியங்குளம், குருமன்காடு, பூங்கா வீதிகளில் மாலை வேளைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களை அ ச்சுறுத்தும் வகையில், இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக பல தடவைகள் பொலிஸாருக்கு தெரிவித்திருந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மக்களின் பி ரச்சனைகளுக்கு செவிசாய்த்து, போக்குவரத்து பொலிஸாரால் சில இளைஞர்கள் வழிமறிக்கப்பட்டு அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் நிலையத்தில் த டுத்துவைக்கப்பட்டு அவர்களுக்கு எ திராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையை நாம் வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், இச் செயற்பாடுகளை தொடர்ந்தும் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும்.

சமூகத்திற்கு வி ரோதமாக செயற்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார் எடுக்கும் செயற்பாடுகளுக்கு சிவில் பா துகாப்பு குழுக்களும், பொது அமைப்புக்களும் என்றும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.