3 வயதில் இருந்து வித்தியாசமாக மாறிய சிறுமி : இன்று வரை போ ராடும் பரிதாபம்!!

604


வித்தியாசமாக மாறிய சிறுமி



இந்தியாவில் ஏழு வயது சிறுமி ஒருவர் அரிய வகை தோல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அதில் இருந்து மீள்வதற்கு பண வசதி இல்லாமல் தவித்து வருகிறார்.



ஜார்காண்ட் மாநிலத்தின் Bhagoya-வில் இருக்கும் Dumka கிராமத்தை சேர்ந்த சிறுமி Babita. 7 வயதாகும் இவரால் மற்ற குழந்தைகள் போன்று சாதரணமாக சாப்பிடவோ, உட்காரவோ, பள்ளிக்கு செல்லவோ முடியாது.




ஏனெனில் அவளுடைய தோல் வறண்டு இருக்கும். அப்படி சாப்பிட்டாலும் வேகமாக சாப்பிட முடியாது, மெதுவாக சாப்பிட்டால் மட்டுமே அந்த தோல் உடைந்துவிழாது. இதன் காரணமாக அவரால் சரியாக மென்றும் சாப்பிட முடியாது.


பார்ப்பதற்கே கொஞ்சம் தோல் வறண்டு வித்தியாசமாக காணப்படுவதால், அவருடன் அங்கிருக்கும் குழந்தைகள் விளையாட பயப்படுகின்றனர். இதன் காரணமாகவே அவர் வெளியில் செல்லாமல் அதிக நாட்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கிறார்.

ஆண்டிற்கு ஒரு முறை வயல்கள் மூலம் கிடைக்கும் வருமானம், மாதம் இந்திய மதிப்பில் 5000 ரூபாய் பணத்தை வைத்தே அவர்கள் குடும்பம் நடத்துவதால், இவரின் மருத்துவ செலவை குடும்பத்தினரால் போதிய அளவிற்கு பார்க்க முடியவில்லை.


மகளுக்காக பெற்றோர் அங்கிருக்கும் மருத்துவமனைகளுக்கு எல்லாம் சென்றுள்ளனர். இருப்பினும் இதை சரி செய்வதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படுவதால், அது இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மருத்துவ உதவிக்காக தங்கள் கிராமம் மற்றும் தலைநகர் ராஞ்சி உள்ளிட்ட சுற்றியுள்ள நகரங்களைச் சேர்ந்த மருத்துவர்களை சந்தித்துள்ளனர்.

அவளுடைய வழக்கமான மருந்தை தொடரவே கஷ்டமாக இருப்பதால், குடும்பத்திற்கு உதவி தேவைப்படுகிறது. மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், அவளின் நிலை இதை விட மிகவும் மோசமாகிவிடும்.

இவர் பிறக்கும் போது இந்த நோயால் பாதிக்கவில்லை, தன்னுடைய மூன்று வயதில் இந்த நோயின் முதல் அறிகுறி தெரிந்துள்ளது.

அதன் பின் அது அப்படியே மெல்ல, மெல்ல உடல் முழுவதும் பரவி, அவரின் தோல் வறண்டு காணப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் அவர் கண்டிப்பாக நாள் ஒன்றிற்கு தன்னுடைய உடலை ஈரமாக்க வேண்டும்.

இப்படி இவர் கஷ்டப்படும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இவரை சமூக ஆர்வலரான Anjula Murmu என்பவர், சிறுமியின் கிராமத்திற்கு சென்று அவரை சந்தித்து பிஸ்கட் மற்றும் பொம்மைகள் போன்றவை கொடுத்து, தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இவரை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அறுவை சிகிச்சை மருத்துவர் அனந்த்குமார், பபிதாவின் நிலையை கவனித்து வருவதாகவும், சிறுமியின் நிலையை உண்மையில் குணப்படுத்தக்கூடியது என்று குடும்பத்தினருக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதுடன், நிச்சயம் உதவுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த வயதில் மற்ற குழந்தைகளுடன் விளையாட முடியாமல், பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலே முடங்கி கிடக்கும் Babita-வுக்கு விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையவாசிகள் அவரின் புகைப்படங்களை வைரலாக்க துவங்கியுள்ளனர்.