கனடா, சுவிஸ் உட்பட 48 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு!!

341

அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட இலவச ஒன் அரைவல் விசா திட்டமானது இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கான சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் வகையில் இலவச ஒன் அரைவல் விசா திட்டம் கொண்டு வரப்பட்டது.

அவுஸ்ரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட 48 நாடுகளுக்கு இந்த சலுகையானது கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து 6 மாதங்கள் அமுலில் இருந்த இந்த சலுகைத்திட்டமானது இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கால நீடிப்பு அறிவிப்பானது குறித்த 48 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.