இது வரலாற்றில் முதல் தடவையாக நடக்கும் விடயம் : பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!!

297


பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு..



உள்ளூர் பரீட்சைகளின்போது நிரலாக்கப்படாத (Non-Programmable) கணிப்புப்பொறிகளை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது.



இதன்படி இலங்கை கணக்கியல் சேவை தரம் மூன்று பரீட்சையின் நிதிக்கணக்கியல் ஒன்று வினாத்தாள் மற்றும் இரண்டு வினாத்தாள் ஆகியவற்றுக்கே கணிப்புப் பொறிகளை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித இதனை தெரிவித்துள்ளார். இதற்கு அமைய 2020ம் ஆண்டு பெப்ரவரி 16, 22 மற்றும் 23ம் திகதிகளில் நடைபெறவுள்ள பரீட்சைகளில் இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக அவர் அறிவித்துள்ளார்.


இதேவேளை இந்த பரீட்சைகளின்போது தொடர்புக்கொள்ளக்கூடிய இலத்திரனியல் கருவிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத்தின்(On-line) ஊடாக கோரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.