சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்கள் இன்று விடுதலை!!

311

33 மாணவர்கள்

கொரோனா வைரஸினால் (கொவாட்19) பாதிக்கப்பட்ட சீனாவின் யுஹான் மாகாணத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் 33 பேரும் இன்று மருத்துவக் க ண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த முதலாம் திகதி சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு தியத்தலாவ இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட சிறப்பு க ண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இவர்களிடம் கொரோனாவைஸ் தொற்று இல்லை என்ற உறுதிப்பாடு கிடைத்துள்ளமையை அடுத்தே அவர்கள் தியத்தலாவ முகாமில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர்கள் அக்குரேகொடயில் உள்ள இராணுவ தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்