யாழ். பல்கலையில் மீண்டும் பகிடிவ தை : ராக்கிங்கில் ஈடுபட்ட கலைப்பீட மாணவன் அ திகாரிக்கு மி ரட்டல்!!

398


யாழ். பல்கலையில்..



யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பா லியல் ப கிடிவ தை விவகாரம் அடங்கும் முன்னரே மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது.



ப கிடிவ தை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவன் த வறான முடிவு எடுத்து உ யிரிழக்க மு யற்சித்த நிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் கா ப்பாற்றப்பட்டான்.




ப கிடிவ தையில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனிடம் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரி, மாணவனால் மி ரட்டப்பட்ட தையடுத்து அவர் பதவி வி லகல் கடிதத்தை யாழ். பல்கலையின் தகுதி வாய்ந்த அதிகாரியிடம் கையளித்துள்ளார்.


யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட புதுமாணவனை, மூத்த மாணவர்கள் ப கிடிவ தைக்கு உ ட்படுத்தியுள்ளனர். இதனால் ம னமுடைந்த புதுமுக மாணவன் தான் உ யிரிழக்கப் போவதாக சக மா ணவர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியுள்ளார். சக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

ப கிடிவ தையில் ஈடுபட்ட மாணவன் விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டார். விசாரணையின் போது, புறொக்டரை (பிரதான முறைப்பாட்டு அதிகாரி) மி ரட்டும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.


கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனின் அ தட்டலையடுத்து தான் பதவியிலிருந்து விலகுவதாக, புறொக்டர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு நேற்றுமுன்தினம் மாலையே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று மாலை, மி ரட்டிய மாணவனை அழைத்து, புறொக்டரிடம் மன்னிப்புக் கோருமாறு தகுதி வாய்ந்த அதிகாரி கோரினார்.

மாணவன் மன்னிப்புக் கோரியதையடுத்து, புறொக்டர் தனது பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றுள்ளார். மாணவனுக்கு எந்தவொரு த ண்டனையும் விதிக்கப்படவில்லை.

-தமிழ்வின்-