உலக சம்பியனான அவுஸ்திரேலியா : மோசமாக தோற்ற இந்தியா : கண்ணீர் விட்டு அழுத சோகம்!!

562


உலக சம்பியனான அவுஸ்திரேலியா..



பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்ததால், அந்தணியின் இளம் வீராங்கனை க ண்ணீர் விட்டு அ ழுத புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



அவுஸ்திரேலியாவில் மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோ துவதால், ரசிகர்களுடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.




மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.


அதன் படி அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. அவுஸ்திரேலியா அணியின் ஹீலே 39 பந்துகளில் 75 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதன் பின் வந்த அவுஸ்திரேலியா அணியின் தலைவி மெக் லானிங் 16 ஓட்டங்களில், தீப்தி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


இதனையடுத்து களமிறங்கிய கார்ட்னர் 2 ஓட்டங்களுடன்,தீப்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹெயன்ஸூம் 4 ஓட்டம் பூனம் யாதவ் சுழற்பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருப்பினும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுமையும் அதிரடியாகவும் விளையாடிய மூனி 54 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுத்ததால், அந்தணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துவக்க வீரர் ஷபாலி வர்மா வெறும் 2 ஓட்டங்களில் பெளவிலியன் திருபினார். 2 பவுண்டரிகள் விளாசி சிறிது நம்பிக்கையை கொடுத்த மந்தானாவும் 11 ஓட்டங்களில் வெளியேற இந்திய அணியின் நம்பிக்கை அப்படியே போனது.

இதனால் அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற இந்திய அணி இறுதியாக 99 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியா மகளிர் அணி, டி20 உலகக்கோப்பையில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணியில் அதிகப்பட்சமாக தீப்தி ஷர்மா 33 ஓட்டங்கள் எடுத்தார். முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றுவிடும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்ளுக்கு போட்டியின் முடிவு பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் 16 வயது இளம் வீராங்கனையும், துவக்க வீரருமான ஷபாலி வர்மா இந்திய அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளால், அப்போதே தோல்வியை நினைத்து டீ சார்ட்டால் முகத்தை மூடி அழுதார். இதே போன்று மற்ற வீராங்கனைகள் சிலரும் போட்டி முடிந்த பின் அழுதனர்.

இந்த உலகக்கோபை தொடரில் இந்திய அணிக்கு தன்னுடைய அதிரடி ஆட்டத்தை கொடுத்து, ரசிகர்களை ஷபாலி வர்மா பெரிதும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.