கொரோனா வைரஸ் இலகுவாக தாக்கும் இரத்தவகை இதுதான் : ஆய்வில் தகவல்!!

1080


கொரோனா வைரஸ்



சீனாவில் கொரோனா பாதித்தவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியைச் செய்துள்ளது.



கொரோனா பாதித்த 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட செயல்கள், ரத்த மாதிரி, முந்தைய நோய் தாக்கம் என்று பல வி‌ஷயங்களை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துள்ளனர்.




இந்த நிலையில் இதில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா பாதித்த 2500 பேரில் 65 சதவீதம் பேர் ‘A’ இரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.


அதாவது ‘A’ பொசிட்டிவ், ‘A’ நெகட்டிவ், ‘AB’ பொசிட் டிவ், ‘AB’ நெகட்டிவ் ஆகிய இரத்த மாதிரிகளை கொண்டவர்களைத்தான் இந்த வைரஸ் எளிதாக பாதித்துள்ளது.

இன்னொரு பக்கம் ‘O’ பொசிட்டிவ் மற்றும் ‘O’ நெகட்டிவ் வகை இரத்தம் கொண்டவர்களுக்கு குறைவாக பாதித்துள்ளது.


‘O’ வகை ரத்தம் கொண்டவர்களை இந்த வைரஸ் தாக்காது என்றெல்லாம் சொல்லவில்லை. அவர்களுக்கு தாக்கம் குறைவாக ஏற்படுகிறது.

ஆனால் ‘A’ வகை இரத்தம் கொண்டவர்கள் மிக எளிதாக வைரஸ் தாகத்திற்கு உள்ளாகிறார்கள். இவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் இதேபோல் சார்ஸ் நோய் வந்த போதும் அந்த வைரஸ் அதிகமாக ‘A’ வகை இரத்தம் கொண்டவர்களைத்தான் பாதித்தது. அதுவும் கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான்.

எனவே ‘A’ ரத்த வகை கொண்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ஏனையோரும் அதிக சுத்தத்துடனும் கவனமுடனும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.