வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் அமைதியான வழிபாடு!!

606

புத்தாண்டை முன்னிட்டு..

மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் அமைதியான முறையில் நடைபெற்றன.

இருப்பினும் மக்கள் தொகை குறைவாக காணப்பட்டதுடன் வீடுகளிலேயே அமைதியான முறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

சார்வரி புத்தாண்டானது இன்று இரவு 7.26 இற்கு மலர்ந்திருந்தது. கொரனா தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில் மக்கள் வீடுகளிலேயே அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடினர்.

இருப்பினும், இந்து ஆலயங்களிலும் அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றன. குறைந்தளவிலான மக்கள் தொகையுடன் சமூக இடைவெளிகள் பேணப்பட்டு பொலிசார் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைவாக வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலய பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றது.