போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : அதன் பின் மணமகள் செய்த செயல் : கொரோனாவால் நடந்த விசித்திர திருமணம்!!

839

விசித்திர திருமணம்..

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், வாட்ஸ் ஆப்பில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு கடந்த மாதத்திற்கு இடையில் அமுல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கியிருப்பவர்கள், சொந்த ஊருக்கு திரும்ப முடியாத கஷ்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் கொரோனா வருவதற்கு முன்னரே சில திருமண நிச்சயதாரத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டிருந்ததால், அதை எல்லாம் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் மட்டும் சிலர் கலந்து கொள்ளும் வகையில் திருமணம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதை எல்லாம் மிஞ்சும் வகையில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த ஜங்கனசேரியை சேர்ந்த 30 வயது வங்கி ஊழியர் ஸ்ரீஜித்துக்கும் உத்திரபிரதேச மாநிலம், ஹரிபட் அடுத்த பள்ளிபட் பகுதியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கேரளாவை சேர்ந்த அஞ்சனா என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அதில், வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் திகதி திருமணம் செய்து கொள்வது என்று குறிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கால் மணப்பெண் அஞ்சனாவால் கேரளாவுக்கு வர இயவில்லை.

இதனால், அவரவரர் வசிக்கும் இடத்தில் இருந்தே திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்று காலை மணப்பெண் அஞ்சனா , அலங்காரத்துடன் , தனது தாய் மற்றும் சகோதரருடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் தோன்ற,

மணமகன் ஸ்ரீஜித் தன் கையில் இருக்கும் தாலியை போனுக்கு கட்ட, மணமகள் அஞ்சனா அவர் கையில் இருந்த தாலியை தன் கழுத்தில் கட்டிக்கொண்டார். அருகில் இருக்கும் இருவீட்டாரும் மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.